357
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்றும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபரை நெல்லியடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
Spread the love