402
பேருந்தில் பணிக்கு வந்தவேளை , பணியிடத்திற்கு முன்பாக மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணியாற்றும் மட்டுவிலை சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மட்டுவிலில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் இருந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நாவற்குழி பகுதியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வந்திறங்கிய வேளை , திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love