335
யாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில் காதலன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசியதுடன் , வீட்டின் மீதும் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீதும் தாக்குதல் மேற்கொண்டு சேதங்களை ஏற்படுத்தியதுடன் , வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.
தாக்குதலில் வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , வீட்டில் வசிக்கும் யுவதியுடன் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் காதல் வயப்பட்டு இருந்ததாலும் , அந்த காதல் விவாகரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
அதனை அடுத்து யுவதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூவரை நேற்றைய தினம் மாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு காவல்துறையினர்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love