291
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . ஐயனார் கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தோர் , மதிய நேரம் அயலில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சென்றுள்ளனர். நிகழ்வு முடிந்து தமது வீடு திரும்பியோர் , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதனை அவதானித்து , வீட்டினுள் சென்று பார்த்த போது , வீட்டில் இருந்த, சங்கிலி , காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதனை அவதானித்துள்ளனர்.
அதனை அடுத்து , பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love