307
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான ஹொக்கைன் போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவா் 1 கிலோ 12 கிராம் ஹொக்கைன் போதை பொருளுடன் திங்கட்கிழமை(18) கைது செய்யப்பட்டுள்ளாா்.
மன்னார் காவல்துறை குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபாிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருளுடன் முற்படுத்தவுள்ளனா். கைப்பறப்பட்ட கெக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு 30 மில்லியனுக்கும் (3 கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love