ஈழப்போரின் இறுதியும் அதன் பின்னருமான காலத்தின் காட்சிப்புல, கருத்துப்புல கவிதை நினைவுபடுத்தலாகவும் இந்த நினைவுபடுத்தலை கூட்டு உரையாடலாகவும், காட்சிப்படுத்தலாகவும், ஆற்றுகையாகவும்É இவை அனைத்தும் இணைந்த வடிவமாகவும் வெளிக்கொண்டுவரும் படைப்பூக்கத்தைத் தருகின்ற குறுந்தொகுப்பாகவும் நிலாந்தனின் “யுகமுடிவும் பின்னரும்” கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.
மௌன வாசிப்பைத் தாண்டி சமூக வாசிப்பிற்கான செயல்நிலைத் தூண்டலை ஏற்படுத்தும் கவிதா ஊக்கியாக அமைந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பியல்பாக அமைகிறது.
சொல்É வரியாக விரியும் அர்த்தம் சுமந்த அழகு நிலாந்தனின் கவிதை பல்;லமம். விலைப்பட்டியல், சமையல் குறிப்பு என்ற இலக்கியமாகக் கொள்ளப்படாத வடிவங்கள் மிகவும் வலுவான வகையில் கவிதைத் தொகுப்பில் ஒன்றிணைந்து குறுங்காவியத் தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களும் இத்தகைய கையாளுகையை எந்தையும் தாயும் நாடகத்தில் அழகாகவும், அர்த்தபூர்வமாகவும் இணைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலாந்தனின் “யுகமுடிவும் பின்னரும்” ஈழப்போரின் இறுதியும் அதன் பின்னருமான காலத்தின் மிகவும் தாக்கமான கவித்துவ நினைவுபடுத்தலாகவும் இயங்குகிறது. இந்த நினைவுபடுத்தல் யதார்த்ததின் கையறு நிலையையும்É அதனைப் புரிந்து கொண்டு வாழ்தலை உருவாக்குவதற்கான உணர்வுத் தூண்டலையும்É அறிவுத் தூண்டலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
சாவும் சாம்பலும் மண்டிய அந்தப் புகைவெளியில் மரண அவலத்தின் உணர்வலையின் உள்ளும் வெளியுமாக நின்று வெளிப்படுத்தும் கவிதா கதைசொல்லியின் காலங்காலத்துக்குமான படைப்பு நிலாந்தனின் “யுகமுடிவும் பின்னரும்”
புத்தகமென்பது ஒரு கட்டுக் கடதாசிகளின் அடுக்கு அல்லது தொகுப்பு அல்ல. புத்தகம் அது தாங்கும் விடயத்தின் இல்லம். அதன் அழகும் அளவும் வாசிப்பைத் தூண்டுவதற்கு, கைகளில் வைத்து விரும்பி தட்டித் தடவிப் பார்ப்பதற்கு, மீளவும் மீளவும் வாசிப்பதற்குத் தூண்டுவது.
“யுகமுடிவும் பின்னரும்” கவிதைத் தொகுதி அத்தகையது. அதன் அட்டை வடிவமைப்பும் நூல் வடிவமைப்புங்கூட வாசிப்புத் தூண்டலையும், கைகளில் வைத்திருக்கும் விருப்பையும் தருவதாக இருக்கிறது.
இவையெல்லாம் மிகச் சிறப்பாகப் பதிந்திருப்பினும் கவிதைத் தொகுப்பின் தலைப்பு “யுகமுடிவும் பின்னரும்” எழுத்தணிக் கலையில் யு ஆனது ஆக அமைந்திருப்பது தலைப்பை விளங்கிக் கொள்வதற்கு தடையாகவும், தவறாகவும் இருப்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்.