சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எட்மண்ட் ரணசிங்கவை கௌரவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஊடகத்துறைக்காக பெரும் பங்காற்றிய மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்பநிகழ்வாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
93 ஆவது வயதை அடைந்துள்ள ரணசிங்கவின் 7 தசாப்த கால ஊடகப் பணியை கௌரவிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் பத்திரிகை புரட்சி’ நூலும் இதன்போது வெளியிடப்பட்டது