ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் ( Herat) பகுதிக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 11 மணி அளவில் ஆரம்பித்த நிலநடுக்கம் அடுத்தடுத்து பல முறை பதிவாகியுள்ளது. இதில் அதிகூடிய அளவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 எனும் ரிக்டர் அளவுகளில் அவை பதிவானதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
மக்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வீதிகளுக்கு வந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.