419
மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (7) மாலை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நால்வரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் போது 34 வயது மதிக்கத்தக்க ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை சுபைதீன் நிஜாமுதீன் மரணம் அடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Spread the love