ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11 மணி அளவில் ஆரம்பித்த நிலநடுக்கம் அடுத்தடுத்து பல முறை பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்ததுடன் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்ததாகவும் தொிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நிலநடுக்கத்தில் இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.