391
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டிணம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த
கப்பலின் சோதனை ஓட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.
Spread the love