468
இலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கத்தின் வடக்கு மாகாண அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் கலந்துகொண்டு, தொழிற் சங்கத்திற்கான வாழ்த்து தெரிவித்ததோடு, வருமானப் பரிசோதகர்களது தொழிற் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.
தொழிற் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபையின் தலைவராக திரு.ச.போல் தர்சாந், செயலாளராக திரு.கோ.ஜெகஜீவன், பொருளாளராக திருமதி.ஜோ.ஆரினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Spread the love