யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவை வழங்குனர்களின் திறன் விருத்திக்கான இலவச பயிற்சி நெறி ஒன்றினை நடாத்த வட மாகாண சுற்றுலாப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
அது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இப் பயிற்சி நெறியில், முச்சக்கர வண்டி, வாடகைக் கார், சிறிய வான், பெரிய வான் உரிமையாளர்கள் , சாரதிகள், நினைவுச் சின்னங்கள் தயாரிப்பாளர்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், தங்குமிட உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற சுற்றுலாத் துறையுடன் தொடர்பு பட்ட சேவை வழங்குனர்கள், பங்கு பற்றி பயன் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதன் மூலம் சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட சேவை வழங்குனர்கள் திறனை விருத்தி செய்து கொள்வதுடன் சேவையின் தரத்தினையும் அதிகரித்து கொள்ள முடியும்.
சுற்றுலாப் பொலிஸ், சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் சிறந்த தொழில் முயற்சியாளர்களின் வெற்றிப் பயணங்களின் அனுபவப் பகிர்வினையும், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தினால் வழங்கப்படவுள்ள அடையாள அட்டையினையயும் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே எமது பிரசேத்சை சார்ந்த ஆர்வம் உள்ளவர்கள் கீழ் குறிப்பிடப்படும் வழிமுறைகள் ஊடாக தமது தமது விபரங்களை எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் பதிவு செய்யுமாறும், மேலதிக தகவல்களை 021 221 7311 அல்லது 0778449742 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.