496
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
அதேவேளை பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்தகாவல்துறையினர் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன் , அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர். கசிப்புடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love