444
இலங்கை கடற்படையினரால் இன்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான Crystal Methamphetamine (ICE), சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினர் இன்று (16) அதிகாலை தலைமன்னார் கிராம பகுதி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதோடு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்
இதன் போது சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் நான்கு பொதிகளும்,01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெரோயின் ஒரு பொதி ,சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள ஹாஷிஸ் 5 பொதிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் என கடற்படை தெரிவித்துள்ளது. கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love