362
நடிகர் விஜய்க்கு நாம் எந்த கடிதமும் எழுதவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கூட்டாக தெரிவித்தனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
அக்கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் கடிதத்தில் காணப்பட்டது.
குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,
எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது. வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும் தெரிவித்தனர்.
Spread the love