நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை
கடந்த ஒக்டோபர் 16ம் திகதி நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர் .
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது. நேபாளம் திபெத்- இந்திய டெக்டோனிக் பிளேட் சந்திக்கும் முகட்டில் அமைந்துள்ள பிளேட்டுகள் நூற்றாண்டிற்கு ஒருமுறை இரண்டு மீட்டர்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நகர்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது