Home இலங்கைமுறிகண்டியில் விபத்து – ஒருவா் பலி

முறிகண்டியில் விபத்து – ஒருவா் பலி

by admin

 

முறிகண்டி, செல்வபுரம் பகுதியில்  நேற்று (21) இரவு  இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன்  மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.   முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்  காவல்துறைப்  பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில்   ஏ9  வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துமுள்ளனர்.

விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தை   உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய  காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More