அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமாா் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினா் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள வர் இராணுவத்தினரால் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அந்த நாட்டு அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்