370
காவல்துறை வேலை என்பது சில்லறை கடை வேலையில்லை. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் கடமை செய்கின்றோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜாரூல் காட்டமாக தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கும் போது , இராணுவத்தை யாழில் நிலை நிறுத்தி வைக்கும் நோக்குடனையே சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த
காவல்துறை யினர் மந்தகதியில் செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர், மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
காவல்துறை யினா்பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து, உயிரை பணயம் வைத்தே கடமையாற்றி வருகின்றார்கள். மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும், முதல் முதலாக நாடுவது காவல் நிலையத்தை தான். மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து, ஏற்கக்கூடிய கருத்து அல்ல. ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் காவல்துறையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.
நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஆகவே காவல்துறையினர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை நிறுத்த வேண்டும் என கோரினார்
Spread the love