Home இலங்கையாழில். போதையால் இளைஞன் உயிரிழப்பு

யாழில். போதையால் இளைஞன் உயிரிழப்பு

by admin
யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் சுன்னாகம்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியை சேர்ந்த, 34 வயதுடைய  இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் கழிப்பறைக்கு சென்ற மகன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் , சந்தேகம் அடைந்து தாயார் மகனை அழைத்து, கழிப்பறை கதவை தட்டிய போதும் , மகனின் சத்தத்தை காணாததால் , கதவை உடைத்த போது , மகன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை வலிகாமம் கிழக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்க பணித்தார்
கழிவறைக்கு அருகில் போதை பொருள் பாவனைக்கு பயன்படுத்தும் ஊசி , தேசிக்காய் என்பவை காணப்படுவதால் , இளைஞன் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்தமையால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More