இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் உடல் இன்று (28) முற்பகல் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவரது உடல் நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அவரது உடலை பொறுப்பேற்பதற்காக அவரது உறவினர்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் சிலரும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 07 ஆம் திகதி மேற்கொண் தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க காணாமல் போயிருந்த நிலையில் அவா் மோதல்களின் போது உயிரிழந்ததாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
களனி – ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதான அனுலா ரத்நாயக்க, இஸ்ரேலில் 10 வருடங்களாக பணிபுரிந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது