571
மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ் வகை போதை பொருளும் இன்று திங்கட்கிழமை (6) காலை 11.45 மணி அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார்,புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி,தாராபுரம் உட்பட்ட பல பகுதியில் நீண்ட காலமாக போதை பொருள் விற்பனையாளராகவும் விற்பனை முகவராகவும் செயற்பட்ட குறித்த நபர் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31, மற்றும் 20 வயதுடைய நபர்கள் என்பதுடன் புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு அருகில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட நபர்களிடம் இருந்து 21 கிராம் 9 மில்லி கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 50,000 ரூபா ரொக்கப் பணம் மற்று 2 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பிரதான சந்தேக நபருக்கு 1 கிலோ ஐஸ் போதை பொருள் விற்பனைக்காக வந்த நிலையில் 21 கிராம் போதைப்பொருள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளடு. மிகுதி போதை பொருட்களை தேடும் நடவடிக்கையில் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love