Home இலங்கை கனிய வள மணல் அகழ்வுக்கான ஆவணம்    கையளிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

கனிய வள மணல் அகழ்வுக்கான ஆவணம்    கையளிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

by admin

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   கொண்ணையன் குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும்  கனியவள மணல் அகழ்வுக்கான  ஆவணம்  சட்டபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை (8) காலை குறித்த பிரதேசத்தில் இடம் பெற இருந்த நிலையில் அப்பகுதி   மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகை தந்த திணைக்கள தலைவர்கள் அடங்கிய குழுவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலைகளால் இப்பிரதேசம் எதிர் கொண்டு வரும் பாதிப்புகளை அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை செல்ல விடாது  பாதையை மறித்து அவர்களை   திருப்பி அனுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகளின் தலைமையில் குறித்த குழுவினர்    சென்றிருந்த  நிலையில் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More