தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் வியாழக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன் 15 இந்திய மீனவர்களும்,கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
-குறித்த மீனவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை(9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில்
முன்னிலைப் படுத்தப்பட்ட போது குறித்த அவா்களுக்கெதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது.