303
யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்டவரின் பெ யர் , வயது , இடம் என எந்த தகவலும் இல்லாத பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை காவல்துறையினரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி ரு.கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும் , கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த நல்லூராஜ் (வயது 63) ஆகியவர்களின் சடலங்களே உரிமை கோரப்படாத நிலையில் உள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு பிரதி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Spread the love