உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்திற்கான மரண அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய,
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்த முடியாது. தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 க்கும், அக்டோபர் 17 க்கும் இடையில் நடாத்தியே ஆக வேண்டும்.”