349
விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
Spread the love