525
காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் இராணுவம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
Spread the love