391
பலாங்கொடை, கவரங்ஹேனை, வெஹிங்தென்ன பகுதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடும் மழையுடனான வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(13) 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Spread the love