448
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கே இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love