415
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.11.23) எட்டு குடும்பங்கள் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் நின்ற அரச மரம் ஆலயத்தின் மீது குடைசாய்ந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.
Spread the love