338
யாழ்ப்பாணத்தில் கடந்த சிலதினங்களாக தொடரும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய புதன்கிழமை காலை வரையில், 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அதிகபட்சமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த181 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 36 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.
Spread the love