277
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் இருந்து தாலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண் நகைகள் திருட்டு போயிருந்தன.
அது தொடர்பில் வீட்டார் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னடுத்த காவல்துறையினா் அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், திருட்டு போயிருந்த தாலிக்கொடி ஒன்று சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் , தொடர்ந்தும் சந்தேகநபரிடம் விசா ரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்
Spread the love