303
கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கந்தசஷ்டி விரத காலமான இக்கால பகுதியில் நல்லூரில் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காலையில் உள்வீதியுலா வரும் முருக பெருமான் மாலையில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை தாமரை வாகனத்தில் சிறிய மயிலில் தங்க மாம்பழத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை மாலை சூரன் போர் உற்சவம் இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் உற்சவம் இடம்பெறும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
Spread the love