505
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதி ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவியவருவதாவது,
உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் குறித்த நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை, சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தேவேளை உயிரிழந்தவரின் தாயார் கடந்த நவம்பர் 10 ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டில் தனது மகன் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் இதனாலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love