Home உலகம் உலகக் கிண்ணத்தை, 6 ஆவது முறையாகவும் அவுஸ்ரேலியா வென்றது!

உலகக் கிண்ணத்தை, 6 ஆவது முறையாகவும் அவுஸ்ரேலியா வென்றது!

by admin

அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகவும் உலக கிண்ண கிண்ணத்தை வென்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் KL Rahul 66 ஓட்டங்களையும், Virat Kohli 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் Mitchell Starc 3 விக்கெட்டுக்களையும், Pat Cummins, Josh Hazlewood தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவஸ்திரேலிய அணி சார்பில் Travis Head அதிகபட்சமாக 137 ஓட்டங்களை பெற்றதுடன், Marnus Labuschagne ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய சார்பில் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் Mohammed Shami 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த உலக கிண்ண தொடரில் இந்திய அணி இதற்கு முன்னர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்றிருந்தாலும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More