உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் தோல்வியை அடுத்து இந்தியாவின் இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தேவ் ராஜன் தாஸ் என்ற ரசிகர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ராகுல் லோகர் என்ற ரசிகரும் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நிலையில் இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.