உலகளாவியரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாத்திரம் 89 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. கூறுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகவும் அதிகமாக பெண் கொலைகள் இடம்பெற்ற வருடமாக 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வு முடிவுகளே இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இவற்றில் 55 வீதமான கொலைகள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களால் நடத்தப்பட்டவையாகும்.
ஆண் கொலைகளில் 12 வீதம் மட்டுமே குடும்ப எல்லைக்குள் நடந்ததாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வலுவான மற்றும் செயல்திறன் மிக்க நிறுவனங்களை நிறுவுவதற்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.