வாசிப்பும் எழுத்தும் எனச் சுருங்காத செயற்பாட்டு உலகின் சொந்தக்காரன்.
வாகரைவாணன் அவர்களது எழுத்தும்இ செயலும்இ அறிவார்த்தமான தமிழ் கூறும் நல்லுலகிற்கு வளமான பங்களிப்பினை செய்வன. தமிழியல் தளத்தில் அவரது இயக்கம் பெரும் படிப்பினைக்குரியது.
தமிழ் மொழி சார்ந்தும் வரலாறுஇ பண்பாடு சார்ந்தும்இ மிக நீண்ட காலமாக தமிழிலும்இ ஆங்கிலத்திலும் ஆக்கங்களைத் தந்து கொண்டிருப்பவர். கட்டுரைஇ கவிதைஇ நாடகம் உட்பட நூலாக்கங்களில் மட்டுமின்றி கலை ஆக்கங்களிலும் ஆழ்ந்த பங்களிப்பு அவருடையது.
தமிழ் மொழிஇ பண்பாடுஇ வரலாறு சார்ந்து பிறரால் எழுதப்படும் ஆக்கங்களில் உடன்பாடின்மை காணப்படின் அதனை எதிர்கொண்டு தனது பதிற் கருத்துக்களை உடன் முன்வைப்பதிலும் விழிப்புணர்வுடன் இருப்பவர்.
வாகரைவாணன் அவர்களது எழுத்தும்இ வாழ்வும் அவரது செயற்பாடுகளின் வெளிப்பாடுகள். அவரது உலகம் வாசிப்பும்இ எழுத்தும் எனச் சுருங்கியதல்ல. இத்தகைய மனிதர்கள் எப்படி உருவாகிறார்கள்? தங்கள் கருத்து நிலைகளில் ஆழ்ந்தகன்ற அறிவும் தெளிவும்இ மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ளும்இ ஏற்றுக்கொள்ளும் பண்பாடும் இவர்களில் எப்படிச் சாத்தியமாகி இருக்கின்றது?
இத்தகைய மனிதர்களை இந்த உலகம் காணாது போய்க்கொண்டிருக்கின்றது. அவர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
எனது சிறுபிராயம் முதல் பத்திரிகைஇ சஞ்சிகைஇ நூல் வாசிப்புக்களுக்குள்ளால் அறிமுகமான வாகரைவாணன் அவர்கள் இன்றைய தலைமுறையினர் அறியாத பட்டியலில் அடங்கி விடுவாரோ என்ற ஏக்கத்தை மிகவும் எதிர்பாராத விதமாக பல்கலைக்கழக மாணவன் ர.வினோத்காந்தன் தீர்த்து வைத்தார். இது அதிர்ச்சியாகவும்இ ஆச்சரியமாகவும் இருந்தது.
ஒரு புதிய தலைமுறையினரான வினோத்காந்தன் தேடலுக்குள் படிப்பினைக்குரிய முதுசம் அறியப்பட்டிருப்பது சாதாரணமான விடயம் அல்ல. தனது மண்ணின் பேரறிஞனைத் தேடியிருக்கிறான்இ படித்திருக்கிறான்இ உரையாடியும் உறவாடியும் இருக்கிறான். ஆழ்ந்தகன்ற பேரறிஞனின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பது பெரு மகிழ்ச்சி. பரீட்சையே கல்வி என்று சுருங்கிய அறிவுலகில் அதையும் தாண்டியது அறிவு என்பது நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வாகரைவாணன் அவர்களது மனைவியாரும் உரையாடல்களில் ஈடுபாட்டுடன் பல பழைய விடயங்களை நினைவில் வைத்துப் பகிர்பவராக இருந்து கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
பேராசிரியர் சி. ஜெயசங்கர்.
ர. வினோத்காந்தனின் “வாகரையின் வாணன்” நூல் வெளியீடு
இளம் ஆய்வாளன் ர. வினோத்காந்தன் எழுதிய “வாகரையின் வாணன்” எனும் நூல் வெளியீட்டு விழாவானது 18.11.2023 அன்று மாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. வெளியீட்டு நிகழ்வு ஆரம்பிக்கும் முன், வாகரை வாணன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை அங்கு வந்திருந்த ஆர்வலர்கள் மிகவும் ஆர்வமாகப் பார்வையிட்டு வாகரை வாணனின் அறிவுலகமும், படைப்புலகமும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடி, அவரது நூல்கள் சிலவற்றை விருப்பத்துடன் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெளியீட்டு நிகழ்வை நூல் ஆசிரியர் ர. வினோத்காந்தனின் நண்பனான ச. விமலதர்சன் அவர்கள் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் வழங்கிய “நாங்கள் வாழ வேண்டும்” எனும் ஆரம்பப் பாடலுடன் ஆரம்பமாகி “இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த ஆர்வலர்களை வரவேற்று, “தன்னைப் பற்றிய விளம்பரங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்தாது தனது படைப்புகள் வாயிலாக இவ்வுலகத்தோடு பற்பல உரையாடல்களை மேற்கொண்ட வாகரை வாணன் அவர்களைப் பற்றிய நூலாக்கத்தை மேற்கொண்ட இளம் ஆய்வாளன் ர. வினோத்காந்தனுடன் கைகோர்த்து அவர் எழுதிய வாகரையின் வாணன் எனும் நூலை வெளியிட்டு வைப்பதில் மூன்றாவது கண் நண்பர்கள் குழாம் பெருமகிழ்வடைகின்றது.” எனும் பிறிசில்லா ஜோர்ஜ் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்நூலின் முதல் பிரதியை பேரா. சி. ஜெயசங்கர் அவர்கள் வெளியிட்டு வைக்க வாகரை வாணன் அவர்களின் மனைவி பெற்றுக்கொண்டார். ஏனைய பிரதிகளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், வாகரை வாணன் மற்றும் ர. வினோத்காந்தனின் குடும்ப உறுப்பினர்கள், அரங்கச் செயற்பாட்டாளர்கள், மாணவ நண்பர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந் நிகழ்விற்கு தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக வாகரை வாணன் அவர்கள் சமூகமளிக்காமையினால் அவர் சார்பாக அவரது மனைவி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் “தமிழ் சூழலில் அறிவுருவாக்கம்” எனும் தலைப்பில் பேரா. சி. ஜெயசங்கர் அவர்கள் வாகரை வாணன் அவர்களின் எழுத்துக்களின் காத்திரமான கருத்தியல்களைக் குறிப்பிட்டு “தமிழ்மொழி சார்ந்தும் வரலாறு, பண்பாடு சார்ந்தும் மிக நீண்ட காலமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆக்கங்களைத் தந்த வாகரை வாணன் அவர்கள் இவை சார்ந்து பிறரால் எழுதப்படும் ஆக்கங்களில் உடன்பாடின்மை காணப்படின் அதனை எதிர்கொண்டு தனது பதிற் கருத்துக்களை உடன் முன்வைப்பதில் விழிப்புணர்வுடன் இருப்பவர்.” என்றும் “இத்தகைய மனிதரை இவ் உலகம் காணாது போய்க்கொண்டிருக்கின்ற, கவனத்தில் கொள்ளாத தருணத்தில், பரீட்சையே கல்வி என்று சுருங்கிய அறிவுலகில் அதையும் தாண்டியது அறிவு என்பதை, வாகரை வாணன் பற்றிய தகவல்களை நூல் வடிவில் தர முயற்சி எடுத்ததன் மூலம் ர. வினோத்காந்தன் நிரூபித்திருக்கின்றார்.” என்றும் “இன்றைய இளம் தலைமுறை மாணவனுக்கு வாகரை வாணன் பற்றி நூல் எழுதவேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருந்தது” எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முக்கிய உரையாக இந்நூலின் மதிப்பீட்டுரை வி. சிந்துஉசா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் “வாகரை வாணன் அவர்களது அறிவுலக வெளிப்பாட்டு ஆக்கங்களை வெளியிட்ட ஆண்டுகளுடன் தெளிவாகக் கூறியுள்ள ஆசிரியர், வித்துவான் ஓய்வு மனப்பாங்கு கொண்டவரல்ல எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவர் என ஆசிரியர் வாகரை வாணன் பற்றிய தனது வாசிப்பை கூறியிருப்பது கலை, இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல சாதாரண மனிதர்களுக்கும் இன்றியமையாத சமூக வாழ்வியலுக்கு தேவையான விடயம்” என்றும் “ஆசிரியர் வாகரை வாணன் பற்றிய ஒரு ஆரம்ப அறிமுகப்படுத்தலை செய்திருக்கின்றார்” என்றும் “வாகரையின் வாணன் எனும் இந் நூலானது 31 பக்கங்களைக் கொண்டு சிறியதாக இருந்தாலும் அதன் விடயக் கனதி என்பது வியக்கத்தக்கதாகவே உள்ளது.” என்றும் “இந்நூல் ஆசிரியரின் நோக்கம் போல் இனிவரும் காலத்தில் பல ஆய்வுகள் நிகழ்த்தப்படவும், வெவ்வேறுபட்ட ஆளுமைகளின் உருவாக்கத்திற்கும் இந்நூல் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. வாகரையில் பிறந்து வளர்ந்து பெரும் விருட்சமாக நிற்கும் அறிவுக்கடல் வாகரை வாணன் பற்றி அப்பிரதேசத்திலே பிறந்த இளந்தளிரான பல்கலைக்கழக மாணவன் ர.வினோத்காந்தன் உருவாக்கியுள்ள இந்த நூல் இதுவரை வெளிவராமைக்குக் காரணம் இன்றைய நிகழ்வுக்கான தாகமாகவும் இருந்திருக்கலாம், என்பதோடு இந்த தாகத்தை தீர்ப்பதற்கான ஆரம்ப படி எடுத்து வைத்துள்ள ர.வினோத்தகந்தனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிக்கொண்டு வாகரை வாணனின் கலை, இலக்கியப்பணி மேலும் தொடர்ந்து செல்ல இயற்கை ஆசிபுரியட்டும்” என்று வாழ்த்துக்கள் கூறி, தனது மதிப்பீட்டுரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து இந்நூலின் ஆசிரியர் ர.வினோத்காந்தன் அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் “தான் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகின்ற சொந்த மண்ணில் வாழ்ந்த வாகரை வாணனின் வாழ்க்கைத் தடங்கள், நாடகச் செயற்பாடுகள், மற்றும் அவரது நூல்களை அறிமுகப்படுத்துவதாக தனது நூல் அமைந்துள்ளது” என்றும் “அவர் எழுதிய 42 நூல்களும் பெருமளவில் இவ் உலகிற்கு அறியப்படாத காரணத்தினால் எதிர்காலத்தில் அவை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தப்படவேண்டும்” எனவும் “இவரால் எழுதப்பட்ட பனுவல்களை ஆராய்ந்து வாசிப்பதன் ஊடாக ஒரு நல்ல மனப்பதிவை பெற்றுக்கொள்ள முடிகிறது, அவை பல இளம் ஆய்வாளர்களின் சிந்தனைத் துலங்கலுக்குத் தூண்டலாக அமையும்” எனவும் குறிப்பிட்டு இந்நூல் வெளிவர தன்னோடு துணை நின்ற அனைவரையும் நினைவுகூர்ந்து தனது ஏற்புரையை நிறைவுசெய்தார்.
மேலும் மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் வழங்கிய “பூமியே இயற்கையே நீ வாழி” எனும் பாடல் இடம்பெற்றது. பின்னர் சி. யதுர்சன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைத்து ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்தலுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அத்தோடு இந் நிகழ்வு சிறக்க ர. வினோத்காந்தனுடன் அவரது பல்கலைக்கழக நண்பர்கள், விரிவுரையாளர்கள், குடும்ப உறவுகள், மூன்றாவது கண் நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பல்வகைப்பட்ட தலைமுறைகளைச் சேர்ந்த பலரும் இணைந்து பணியாற்றியமை இந் நிகழ்வில் மிக முக்கியமாகக் கண்டுகளிப்புறக் கூடிய விடயமாக அமைந்திருந்தது. இவ் ஒருங்கிணைந்த செயற்பாடானது இந் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மன நிறைவைத் தந்திருக்கும் என்பதில் ஜயமேதுமில்லை. எனவே இது போன்ற நிகழ்வுகளில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்கெடுக்கையில், பல்வகைப்பட்ட தலைமுறைகளுக்குமிடையே பரஸ்பர கருத்துப் பரிமாற்றம் ஒன்று இடம்பெறுகின்றது. இக் கருத்துப் பரிமாற்றமானது சுதந்திரமானதாகவும், காத்திரமானதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இத்தகைய பரஸ்பர கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள், வழிநடத்தல்கள், கருத்துத் தேடல்கள் போன்றன இன்றைய அவசர காலகட்டத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் அந் நிகழ்வுகளில் பங்குபற்றும் பல்வகைப்பட்ட மனிதர்களுக்கும் ஒரு மன நிறைவான, மகிழ்ச்சியான ஒன்றுகூடலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
23.11.2023
பிறிசில்லா ஜோர்ஜ்