காசா எல்லையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்த விடயம் தொடா்பில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டாா் நாட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினராலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஏனைய சில பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு இந்த தற்காலிக போர் நிறுத்த நீடிப்பு உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை முதல் 04 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதுடன், நேற்றுடன் அது நிறைவுக்கு வரவிருந்த நிலையில் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் போர் நிறுத்த நீடிப்பு தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது