பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் கைது செய்ய வேண்டாம் என கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29)காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை செனஹறடைநஹதுள்ளாா்.
குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைகளின் கீழ் இருந்த பெர்னாண்டோ, மே 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அவா் தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்ற நீதிமன்றம் அவரை விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்கும் கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், இலங்கைக்குள் சென்று 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குமாறும் போதகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த அவர், “கோல்ட் ரூட்” ஊடாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் அவருடன் மேலும் இரு பயணிகளும் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.