362
மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் காவல்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பேசாலை காவல்துறைப் பிரிவில் உள்ள ஒரு வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை சோதனையிட்டபோது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபர் பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை சட்ட நடவடிக்கைக்காக இன்று புதன்கிழமை (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொிவித்த பேசாலை காவல்துறையினர் இ து தொடர்பாக மேலும் ஒருவர் தேடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love