மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதில் காவற்துறை மா அதிபராக நியமித்தமையை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வன்மையாக கண்டிப்பதாக கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்துகிறது.
ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைக்கும் போதே கொழும்பு ஆயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த நியமனத்தை வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நியமனம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவமானம் என்றும் அருட்தந்தை சிறில் காமினி கூறியுள்ளார்.