273
யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியை சேர்ந்தவர் திருட்டு குற்றச்சாட்டிலும், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்தவர் திருட்டு பொருளை வாங்கிய குற்றச்சாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்திய சாலையில் கடந்த மூன்று தினங்களாக தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நெல்லியடி பகுதியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரால் களவாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொலைபேசிகளை மீட்டுள்ளதாகவும், களவாடப்பட்ட தொலைபேசிகளை குறித்த நபரிடம் இருந்து வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறையை சேர்ந்த நபரை கைது செய்து உள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், வைத்திய சாலையில் தொலைபேசி களவு போயிருந்து, எவரேனும் முறைப்பாடு செய்யாது இருந்தால், முறைப்பாடு செய்யுமாறு காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Spread the love