வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மேலும் சில சாட்சிகள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.