Home இலங்கை யாழில்  வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

யாழில்  வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

by admin

 

வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஹற்றன் நஷனல் வங்கியின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், ஹட்டன் நஷனல் வங்கியின் வடபிராந்திய தலைமைக் காரியாலயத்தில் கடந்த 30ஆம் திகதி அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது.  நிகழ்வில், வங்கியின் தலைமையகத்திலிருந்து வருகை தந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர் மற்றும் நுண்பாக நிதிக்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு ரஜீவ் திசாநாயக்க, சிறிய நடுத்தர உடற்பத்தியளர் மற்றும் கூடடாண்மைக்கான தலைமையாளர் திரு என். கேதீஸ்வரன், வட மாகாண ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு கனோஜன், யாழ் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பிரிவுத்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ். சிவேஷன் ,வடமாகாண தொழிற்துறைத் திணைக்கள தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ராகவன் மற்றும், வடமாகாண ஏற்றுமதியாளர்களுடன், வங்கியின் பிராந்திய அலுவலகர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் இன்றைய நலிவுற்ற பொருளாதார சூழலில் ஏற்றுமதி என்பது இந்நாட்டு பொருளாதார ஸ்திரதன்மையினை மேம்படுத்துவதற்கும், புதிய வேலைவாய்பபுக்களினை உருவாக்குவதற்கும் மற்றும் முதலீடுகளினை உள்ளீர்ப்பதற்குமாக ஒரு நம்பிக்கை மிகுந்த பாதையாக
காணப்படுகின்றது.

பொதுவாக ஏற்றுமதி கூட்டமைப்பு என்பது ஏற்றுமதி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் ஒரு இணைப்பாகும். இது சந்தை தகவல்களைப் பகிர்வது, பொருட்கள், சேவைகளுக்கான கொள்வனவாளர்களுடன் சிறந்த விதிமுறைகளுக்கான பேச்சுவார்த்தைகளினை நடத்துவது,
வெளிநாட்டு சந்தையில் தங்கள் தயாரிப்புகள் அல்லது
சேவைகளை மேம்படுத்துவதற்கான கூட்டுச்சந்தை முயற்சிகளினை மேற்க்கொள்ளல் போன்ற ஏற்றுமதியின் பல்வேறு அம்சங்களில் ஒத்துழைக்கவும், வளங்களைத் திரட்டவும் கூட்டாக பணியாற்றவும் ஒன்றிணைவு உருவாக்கப்படுகிறது .  பரஸ்பர நன்மைகளுக்காக ஒவ்வொரு உறுப்பினரின் பலத்தினையும் பயன்படுத்துவதையும் இக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஏற்றுமதிக் கூட்டாண்மை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு அவற்றின் பலங்களை இணைப்பதன் மூலமும், செலவுகளை மேம்படுத்துவதன் மூலமும், சந்தை ஆராய்ச்சியை
விரிவுபடுத்துவதன் மூலமும், அபாயங்களைக் குறைப்பதன் மூலமும், இறுதியில்சர்வதேச வர்த்தகத்தில் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதன் மூலமும் அதிகாரம் அளிக்கிறது

இலங்கையின் வடக்கு மாகாணம் கடந்த கால போரியல் சூழலில் பாதிக்கப்பட்டிருந்தமையால், நாட்டின் ஏற்றுமதித்
துறைக்கு அதன் பங்களிப்பு கணிசமான அளவாகவே காணப்பட்ட்து.
எவ்வாறெனினும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடபுலம் சார்பாக பெரும்பாலும் விவசாய விளை பொருட்களுக்களும், குறிப்பாக வெப்பமண்டல காய்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுசார் உடற்பத்தி பொருட்களே அதிகமாக இருந்து வந்துள்ளது.

எனினும் இன்று பல புதிய ஏற்றுமதிக்கான துறைகள் வடக்கே உருவாக்கப்பட்டு வரப்படுகின்றது, இக் கூட்டமைப்பின் தேவை இன்று வடக்கே தேவையானதும் அவசியமானதுமாக நோக்கப்படுகின்றது. .

எனவே, புதிதாக உருவாக்கப்படும் வடக்கு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (Chamber of Northern Exporters), நீண்ட கால பயணத்தின்
தொடக்கமாக இருக்கும். பிராந்தியத்தின் இத்தகைய முக்கியமான முன்முயற்சியை எளிதாக்குவதில் HNB சிறப்புரிமையும் பெருமையும்
கொள்கிறது.

கூட்டமைப்பின் மற்றொரு நன்மை தேசிய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பிலிருந்தும் நன்மைகளை அதிகரிப்பதாகும். தேசிய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகும், இது தேசிய அளவில் உள்ளூர் ஏற்றுமதியாளர்களின் நலன்களை ஒருங்கிணைத்தல், ஆதரித்தல் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்புதிய முயற்சியில் உருவான இக் கூட்டமைப்பு நாளைய வடபுல ஏற்றுமதிவளச்சியின் ஒரு பலமிக்க படிக்கல்லாக அமையும் என்பதே உண்மை என வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More