குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆகியவற்றிற்கும் கையளித்துள்ளனர். -குருவில் வசந்தபுரம்,வட்டக்கண்டல் என்ற முகவரியை சேர்ந்த ய.சகாயராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் இவ்வாறு மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
-கடந்த 1 ஆம் திகதி(1/12/2023)வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அடம்பன் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் 3 பேர் சிவில் உடையில் எனது வீட்டுக்கு வந்து கணவரை கேட்டு விட்டு வீடு மற்றும் வீட்டுச் சூழலை முழுமையாக சோதனை செய்தனர்.
எனது கணவர் தோட்ட வேலை செய்து விட்டு டீசல் வாங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று விட்டார்.நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இருந்தோம்.