306
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று காவல்துறை சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன.
வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் காவல் லையத்தில் கடமையாற்றிய பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று காவல்துறை சாட்சியங்கள் தமது சாட்சியை பதிவு செய்தன.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சகோதரி மற்றும் , உயிரிழந்த இளைஞன், அவருடன் கைதான இளைஞன் ஆகிய இருவருடன், பிறிதொரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, ஒரே சிறைக்கூடத்தில், தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞனும் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர். அதனை அடுத்து வழக்கினை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அதேவேளை வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது .
Spread the love