409
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு நீதிமன்றில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ள நிலை யில் , அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன் , காவல்துறை பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.
வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில் , கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். அதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு நடைபெறும்.
அதேவேளை நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்தில் கடமையில் இருந்த பொறுப்பதிகாரி பதவி வகித்த காவல்துறை உத்தியோகஸ்தர்களிடம் சாட்சியங் கள் பதிவு செய்யப்படவுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , காவல்நிலையத்தில் கடமையில் இருந்த பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் சாட்சியம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
ReplyReply allForward
|
Spread the love